சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
கோழிக்கறி உணவு வகைகள் |
சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் கோழி கறி (பெரிய துண்டாக) - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பெரியது) தக்காளி - 1 இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி பட்டை - 5 கிராம்பு - 5 அன்னாசி பூ - 3 மராட்டி மொக்கு - 2 மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி சிக்கன் மசாலா - 1 தேக்கரண்டி எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. கோழிக்கறி துண்டுகளை சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக இரண்டு மூன்று கீரல்கள் போடவும். 2. பெரிய வெங்கயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. தோல் உரித்த சின்ன வெங்காயம், பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசி பூ, மராட்டி மொக்கு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 5. பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும். 6. அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை (சுமார் 5 நிமிடம் மிதமான தீயில்) நன்கு வதக்கவும். 7. அதனுடன் கோழிக்கறி சேர்த்து லேசாக கிளறி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா சேர்த்து வதக்கவும். 8. பின்னர் கோழிக்கறி மிதக்கும் அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து வேக விடவும். வேகும் போது அடி பிடிக்காமல் இருக்க இரண்டு மூன்று முறை நன்கு கிளறிவிடவும். 9. கோழிக்கறி நன்கு வெந்து தண்ணீர் சுண்டி கிரேவியாக வரும் வரை வேகவிட்டு, பின்பு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். குறிப்பு 1. வாணலிக்குப் பதில் குக்கரிலும் வேக விடலாம். குக்கரில் வேக வைத்தால் தண்ணீர் சிறிது குறைவாக சேர்க்கவும். குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் குக்கர் மூடியைத் திறந்து பார்க்கும் போது தண்ணீர் அதிகமாக இருந்தால் குக்கர் மூடி போடாமல் தண்ணீர் சுண்டி கிரேவியாகும் வரை லேசான தணலில் வேக விடவும். 2. கோழிக்கறிக்கு இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது பூண்டு இரு மடங்கு அளவும், இஞ்சி ஒரு மடங்கு அளவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஆக்கம் செ.ஹேமாவதி
இடைப்பாடி - 637 101. |