சமையல் குறிப்புகள்
சட்னி வகைகள்

நிலக்கடலை சட்னி

தேவையான பொருட்கள்

நிலக்கடலை - 2 கோப்பை
தேங்காய் துருவல் - 1/2 கோப்பை
பூண்டு - 3 பல்லு
இஞ்சி - 1 துண்டு
வர மிளகாய் - 2
புளி - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

1. தேங்காய் துருவலை லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

2. பிறகு மேலே உள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.

3. பிறகு தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்துப் பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.