சமையல் குறிப்புகள்
சட்னி வகைகள்

கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள்

கொத்தமல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் - 1/4 மூடி
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

1. கொத்தமல்லித்தழையை நன்கு நீரில் கழுவி, துருவிய தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

2. பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து அரைத்த வைத்துள்ள விழுதில் சேர்த்து பரிமாறவும்

குறிப்பு

1. தாளிக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.