சமையல் குறிப்புகள்
சட்னி வகைகள்

கொத்தமல்லி சட்னி (செய்முறை-2)

koththamalli chutney 2

தேவையான பொருட்கள்

கொத்தமல்லித் தழை - 1/4 கட்டு
தேங்காய் - 1/4 கோப்பை
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி (சிறியது) - 1
பச்சை மிளகாய் - 2
புளி - 1 கொட்டை
உப்பு - 1/2 தேக்கரண்டி

தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

1. கொத்தமல்லித்தழையை ஆய்ந்து கழுவிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

2. சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

3. தக்காளியையும், பச்சை மிளகாயையும் தனியே நறுக்கிக் கொள்ளவும்

4. தேங்காயை தனியே துருவிக் கொள்ளவும்.

5. வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறிது கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

6. பிறகு தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

7. பிறகு புளி, துருவிய தேங்காயைப் போட்டு விட்டு, நறுக்கிய கொத்தமல்லித் தழையைப் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

8. இதனை சூடு ஆற வைத்து கொஞ்சம் கரகரப்பாக அறைக்கவும்.

9. பிறகு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.

குறிப்பு

1. தாளிக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.