சமையல் குறிப்புகள்
சட்னி வகைகள்

பொட்டுக்கடலை சட்னி

pottukadalai chutney

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை - 1 கோப்பை
தேங்காய் துருவல் - 1 கோப்பை
பூண்டு - 3 பல்லு
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

1. பொட்டுக்கடலை, தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித் தழை அனைத்தையும் கரகரப்பாக அரைக்கவும்.

2. பிறகு தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்துப் பரிமாறவும்.

குறிப்பு

1. பச்சை மிளகாய்க்கு பதிலாக வர மிளகாய் போட்டு அரைக்கலாம். சப்பாத்தி கோதுமை தோசைக்கு நன்றாக இருக்கும்.

2. இரண்டு மூன்று புதினா தழை சேர்த்து அரைத்தால் வாசனையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.