சமையல் குறிப்புகள்
அல்வா வகைகள்

கடலை மாவு அல்வா

தேவையான பொருட்கள்

கடலைமாவு - 1/2 கோப்பை
சர்க்கரை - 1 கோப்பை
நெய் - 1 கோப்பை
முந்திரி - 5
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. கடலைமாவை கட்டியில்லாமல் சலித்துக் கொள்ளவும். 2. அடுப்பில் வாணலியை வைத்து கடலை மாவைப் போட்டு அதில் 2 தேக்கரண்டி நெய் விட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

3. தனியே1 1/2 கோப்பை தண்ணீரில் கேசரிபவுடர் சேர்த்து, அடுப்பில் இருக்கும் கடலை மாவில் கொஞ்சம் கொஞ்மாக ஊற்றி கட்டியில்லாமல் கிளறவும்.

4. கடலை மாவு முக்கால் பதம் வெந்ததும் சர்ககரையைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

5. பிறகு ஏலக்காய்த் தூள் சேர்த்து, அடுப்பின் தணலை குறைவாக வைத்து, அடிபிடிக்காமல் கிளறி விடவும்.

6. பாத்திரத்தில் ஒட்டாமல், அல்வா பதம் வரும்போது மிதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி, வறுத்த முந்திரியைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.