சமையல் குறிப்புகள்
குழம்பு வகைகள்

கடலைப்பருப்பு சௌசௌ குருமா

kadalaipparuppu chowchow kuruma

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு - 100 கிராம்
சௌசௌ - 1 (150 கிராம் அளவு)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
தேங்காய் 1/4 மூடி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
கசகசா - 1/4 தேக்கரண்டி
லவங்கம் - 4
பட்டை - 2
பச்சைமிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கடலைப்பருப்பை கழுவி வேகவைத்துக் கொள்ளவும்.

2. வெந்த பருப்பை லேசாக (பாதி பருப்பாக) மசித்து வைத்துக் கொள்ளவும்.

3. வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. சௌசௌவை தோல் சீவி ஒரு அங்குலம் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும்.

5. தேங்காயைத் துருவி சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

6. அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய கறிவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.

7. பிறகு இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

8. பின்னர் வெட்டிய சௌசௌ சேர்த்து நன்கு வதக்கவும்.

9. மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

10. காய் வெந்ததும் தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்க்கவும்.

11. பிறகு வேக வைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து சோம்பு வாசனை போகுமளவு நன்றாக கொதிக்க விடவும். பாத்திரம் அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

12. பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லித்தழை சேர்க்கவும்.

குறிப்பு

1. பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

2. வேக வைத்த கடலைப்பருப்பை குழம்புடன் சேர்த்ததும், சிறிது நேரத்தில் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.