சமையல் குறிப்புகள்
குழம்பு வகைகள்

மோர் குழம்பு

mor kuzhambu

தேவையான பொருட்கள்

புளித்த தயிர் - 1 கோப்பை
தேங்காய் - 1/4 மூடி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
முந்திரி - 4
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வெந்தயத்தூள் - 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. புளித்த தயிர், மஞ்சள் தூள், உப்பு, ஆகியவற்றை தண்ணீர் கலக்காமல் கலந்து வைக்கவும்.

2. துருவிய தேங்காய், சீரகம், முந்திரி, பச்சை மிளகாய், ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உடைத்த உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்து, பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், வெந்தயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

4. அடுத்து இதனுடன் ஏற்கனவே அரைத்த கலவையையும், தயிர் கலவையையும் சேர்த்து வேகவிட்டு, கொதி வரும் முன் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு

1. இதில் காய் சேர்க்க வேண்டுமானால் தனியாக காயை வேகவைத்து கடைசியில் சேர்க்க வேண்டும்.

2. நன்றாகப் புளித்த தயிராக இருந்தால் குழம்பு நன்றாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.