சமையல் குறிப்புகள்
குழம்பு வகைகள்

பருப்பு சாம்பார்

paruppu sambar

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1 கோப்பை
பூண்டு - 3 பல்லு
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் - 1 கோப்பை (நறுக்கியது)
தக்காளி 2
புளி - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கத்தரி, முருங்கை, முள்ளங்கி, அவரை, பின்ஸ் - ஏதாவது ஒரு காய் 100 கிராம்.

தாளிக்க

கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வர மிளகாய் - 2
ரசப்பொடி - 1/2 ஸ்பூன்
கொத்து மல்லி தழை - சிறிது.

செய்முறை

1. முதலில் குக்கரில் பருப்பு, பூண்டு, மிளகு, சீரகம், எண்ணெய் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

2. பிறகு வாணலியில் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

3. அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, நறுக்கிய ஏதாவது ஒரு காய் போட்டு நன்கு வதக்கவும்.

4. வதக்கிய பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

5. பிறகு புளியைக் கரைத்து கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

6. பிறகு வேக வைத்த பருப்பை மசித்து இதில் சேர்க்கவும். நன்கு கொதித்தபின் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.