சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
குழம்பு வகைகள் |
பாசிப்பருப்பு குழம்பு தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு - 100 கிராம் சின்ன வெங்காயம் - 1 கப் (நறுக்கியது) தக்காளி - 3 புளி - சிறதளவு பூண்டு - 5 பல் சீரகம் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு தாளிக்க கடுகு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி உளுந்து - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிது எண்ணெய் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து வர மிளகாய் - 2 ரசப்பொடி - 1/2 தேக்கரண்டி கொத்து மல்லி தழை - சிறிது. செய்முறை 1. பாசிப்பருப்பை லேசாக வறுத்து பூண்டு, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். 2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்த பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி வரமிளகாய் போட்டு வதக்கவும். 3. வேக வைத்த பாசிப்பருப்பை இதில் கொட்டி புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். 4. பிறகு ரசப்பொடியை சேர்த்து, கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும். குறிப்பு 1. இதில் காய் சேர்க்க வேண்டுமானால் நீர் காய்களான, புடலங்காய், வெள்ளை பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவற்றை நறுக்கி, வெங்காயம் வதக்கும் போது சேர்க்க வேண்டும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 037. |