சமையல் குறிப்புகள்
குழம்பு வகைகள்

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

potato pea kuruma

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு - 1/4 கிலோ
தக்காளி - 3
தேங்காய் - 1/2 மூடி
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சைபட்டாணி - 100 கிராம்
பிரியாணி இலை - 1 பட்டை - 4
கிராம்பு - 4
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொத்துமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. உருளைக்கிழங்கையும், பச்சைபட்டாணியையும் முதலில் தனியே வேகவைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.

4. அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

5. பிறகு தக்காளி, கருவேப்பிலை போட்டு வதக்கவும்.

6. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

7. அதில் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து, பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணியையும் சேர்க்கவும்.

8. அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து மல்லித்தூள் வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

9. பிறகு தேங்காய், சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து, அடுப்பில் உள்ள உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.

10. குழம்பு நன்கு கொதித்ததும், கொத்துமல்லி தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.