சமையல் குறிப்புகள்
குழம்பு வகைகள்

தக்காளி கொத்சு

tomato kothsu

தேவையான பொருட்கள்

தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயம் - 1 சிட்டிகை
கடுகு - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பெரிய வெங்காயம், தக்காளியை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

2. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.

3. அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. வெங்காயம் சிவக்கும் அளவு வதக்கிய பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து லேசாக கிளறி, உப்பு, 2 குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து, மல்லித் தூள் வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

6. தண்ணீர் நன்றாக சுண்டி, ஓரளவிற்கு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. தக்காளி குறைவாக சேர்க்க விரும்பினால் 2 தேக்கரண்டி தக்காளி கூழ் (சாஸ்) சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்.

2. சப்பாத்தி, தோசை, மற்றும் சாப்பாட்டிற்கு தக்காளி கொத்சு மிகவும் சுவையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.