சமையல் குறிப்புகள்
சிறுதானிய உணவுகள்

ராகி கம்பு குழி பணியாரம்

raghi kambu kuzhipaniyaram

தேவையான பொருட்கள்

ராகி மாவு - ஒரு கோப்பை
கம்பு - ஒரு கோப்பை
தோசை மாவு - ஒரு கோப்பை
கோதுமை மாவு - 1 மேசைக்கரண்டி
ரவை - ஒரு மேசைக்கரண்டி
பனைவெல்லம் - 2 கோப்பை
ஏலக்காய் - 3
உப்பு - 2 சிட்டிகை
முட்டை - 1
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை

1. ராகிமாவு, கோதுமை மாவு, கம்பு மாவைச் சலித்து கொள்ளவும்.

2. பனைவெல்லத்தை தூளாக்கி அதில் ஏலக்காய் தட்டிப் போட்டு பாகு காய்ச்சி ஆற வைக்கவும்.

3. தோசைமாவுடன் முட்டை, ரவை, சலித்து வைத்துள்ள முன்று மாவு வகைகள், வெல்ல பாகு அனைத்தையும் சேர்த்து அதிகம் தண்ணீர் விடாமல் அடர்த்தியாக கரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.

4. குழிபணியார சட்டியை அடுப்பில் வைத்து காயவைத்து அதில் எண்ணையை சுற்றிலும் ஊற்றி கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி மிதமான தீயில் கருகாமல் பணியாரம் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு

1. இதை தோசையாகவும் சுட்டு எடுக்கலாம்.

2. பரிமாவும் அளவு - 4 நபர்களுக்கு; ஆயத்த நேரம் - 20 நிமிடம்; சமைக்கும் நேரம் : 30 நிமிடம்.

ஆக்கம்

ஜலீலா கமால்
துபாய்.