சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
ஆட்டுக்கறி உணவு வகைகள் |
ஆட்டுக்கால் மிளகு குழம்பு தேவையான பொருட்கள் தாளிக்க தேவையானவை எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு கொத்துமல்லித்தழை - கால் கட்டு புதினா - சிறிது வேகவைக்க தேவையானவை ஆட்டுக்கால் - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 3 தக்காளி - 2 (பெரியது) பச்சை மிளகாய் - 2 மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் - 3 மேஜைக்கரண்டி தேங்காய்ப் பால் - அரை குவளை (டம்ளர்) பாதாம் - எட்டு மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி (கடைசியில் சேர்க்க) உப்பு - தேவையான அளவு செய்முறை 1. ஆட்டுக்காலை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும். 2. பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து தேங்காய்ப் பாலுடன் சேர்க்கவும். 3. சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் வேகவைக்க தேவையான பொருள்களைச் சேர்க்கவும். 4. ஆட்டுக்காலை அனைத்து மசாலாக்களுடனும் சேருமாறு நன்கு பிசறி பத்து நிமிடம் ஊற வைக்கவும். 5. குக்கரில் நான்கு குவளை (டம்ளர்) தண்ணீர் அல்லது ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி கொதிக்க விடவும். 6. கொதி வந்ததும் குக்கர் மூடியைப் போட்டு வெயிட் போட்டு தீயை நடுத்தரமாக எரியவிடவும். இல்லையென்றால் குழம்பு தெறிக்கும். நான்கு அல்லது ஐந்து விசில் வரை வேகவிடவும். பிறகு தீயை குறைத்து (சிம்மில்) வேகவிடவும். ஆட்டுக்கால் இளசானதாக இருந்தால் 20 நிமிடத்திலும் இல்லையென்றால் 30 நிமிடத்திலும் வெந்துவிடும். 7. வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் பாதாம் கலவையை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும். பிறகு ஒரு கரண்டி மிளகு தூள் சேர்க்கவும். 8. தனியே தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்கால் குழம்பில் சேர்த்து இறக்கவும். குறிப்பு 1. காலில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் ஆகையால் எண்ணெய் கொஞ்சமாக ஊற்றினால் போதும். 2. இதை முட்டு வலிக்கு மாதம் இருமுறை செய்து சாப்பிடலாம். மூட்டு பலம் பெறும். 3. குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது இதை சூப்பாகவும் வைத்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தகுந்தமாதிரி காரம் குறைத்து நெய்யில் கூட தாளிகலாம். செய்து முடித்து வடிகட்டி கொடுக்கவும். 4. குளிர் காலங்களில் இது போல் மிளகு சேர்த்து செய்து சாப்பிடலாம். காரம் தேவைப்படுபவர்கள் இன்னும் கூட்டிக் கொள்ளலாம். 5. இந்த ஆட்டு காலில் குருமாவும், சூப்பும் செய்யலாம். 6. சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா, இட்லி, இடியாபம், தோசை, ஆப்பம், நெய் சோறு ஆகிய அனைத்திற்கும் இதை தொட்டு கொள்ளலாம். ஆக்கம் ஜலீலா பானு
துபாய். |