சமையல் குறிப்புகள்
ஆட்டுக்கறி உணவு வகைகள்

கிட்னி கூட்டு

kidney koottu

தேவையான பொருட்கள்

ஆட்டு கிட்னி - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தனியாதூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முக்கால் முக்கால் தேக்கரண்டி (தேவைக்கு)
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி தழை - சிறிது
எண்ணை - நான்கு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு

செய்முறை

1. ஆட்டு கிட்னியை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2, வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. ஓரு வாயகன்ற பிரஷர் பேனில் (அல்லது வாணலியில்) எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய பட்டை போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கருகாமல் நன்கு பொன் முறுவலாக வதக்கவும்.

4. இஞ்சி பூண்டு வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

5. பிறகு கிட்னி, எல்லா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் (சிம்மில்) ஐந்து நிமிடம் வேகவிடவும்.

6. நன்கு வெந்து கூட்டானதும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொத்துமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. கிட்னி கழுவும் போது மஞ்சள் தூள் அல்லது வினிகர் சேர்த்து ஊறவைத்து கழுவவும்.

2. பிளையின் சாதம், ரொட்டி, பரோட்டா, சப்பாத்தி, தக்காளி தால், பிளெயின் தாள், போன்றவற்றிற்கு ஏற்ற பக்க உணவாகும்.

ஆக்கம்

ஜலீலா பானு
துபாய்.