சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
ஆட்டுக்கறி உணவு வகைகள் |
ஆட்டுக்கறி வெண்டைக்காய் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுக்கறி - 1/4 கிலோ வெண்டைக்காய் - 150 கிராம் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி தேங்காய் - 2 பத்தை (துண்டு) முந்திரி - 5 பட்டை - ஒரு சிறிய துண்டு இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக் கரண்டி புதினா - 6 இதழ் கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. ஆட்டுக்கறியை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும். 2. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். 3. தேங்காய், முந்திரியை நன்கு மையாக அரைக்கவும். 4. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி, பட்டை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். 5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். 6. பிறகு கொத்தமல்லித்தழை, புதினா போட்டு இரண்டு நிமிடம் குறைந்த தீயில் (சிம்மில்) வேக விடவும். 7. அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 8. இப்போது மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, மட்டனை சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் குறைந்த தீயில் (சிம்மில்) வேக வைக்கவும். 9. எல்லா மசாலாவும் நன்கு கலந்தவுடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி முன்று நான்கு விசில் வரும் வரை நன்கு வேக விடவும். 10. ஆட்டுக்கறி வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரியை ஊற்றி தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 11. வெண்டைக்காயை கொண்டையையும் வாலையும் கிள்ளிவிட்டு இரண்டாக அரிந்து சேர்த்து இரண்டு நிமிடம் மட்டும் வேக விட்டாலே போதுமானதாகும். 12. அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லித்தழை (அ) புதினாவை கொண்டு அலங்கரிக்கவும். சுவையான கம கம ஆட்டுக்கறி வெண்டைக்காய் குழம்பு தயார். குறிப்பு 1. ஆட்டுக்கறியுடன் எல்லா வகையான காயையும் போட்டு செய்யலாம். முக்கியமாக முருங்கைக்காயை உபயோகிக்கலாம். 2. வெண்டைக்காய் நறுக்கும் போது கழுவி விட்டு நறுக்க வேண்டும் இல்லையென்றால் காய் குழ குழப்பாக ஆகிவிடும். 3. உணவுக் கட்டுப்பாட்டில் (டயட்டில்) இருப்பவர்கள் குழந்தைகளுக்கு ஆட்டுக்கறியைக் கொடுத்து விட்டு, குழம்பும் வெண்டைக்காயும் தொட்டு சப்பாத்திக்கு சாப்பிடலாம். ஆக்கம் ஜலீலா பானு
துபாய். |