சமையல் குறிப்புகள்
ஓட்ஸ் வகைகள்

ஓட்ஸ் பாயசம்

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - அரை கோப்பை
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - 2 கோப்பை (400 கிராம்)
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 5
திராட்சை - 5
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை

1. ஓட்ஸுடன் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

2. தனியே ஒரு பாத்திரத்தில் பாலை சுண்ட காய்ச்சிய பின், அதனுடன் வேகவைத்த ஓட்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

3. ஏலக்காய் பொடியை இதனுடன் சேர்க்கவும்.

4. முந்திரி, திராட்சையை தனியே நெய்யில் வறுத்து கொதிக்கும் பாயசத்துடன் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. ஓட்ஸை பாலுடன் வேகவைத்தால் அடிக்கடி பொங்கி வரும். எனவே தண்ணீரில் வேக வைத்து ஆற வைத்து பின்னர் பாலுடன் சேர்க்கவும்.

2. தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தேங்காய்த்துறுவல் சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.