சமையல் குறிப்புகள்
ஓட்ஸ் வகைகள்

ஓட்ஸ் பொட்டுக்கடலை லட்டு

oats pottukadalai laddu

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கோப்பை (250 கிராம்)
பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 1 கோப்பை
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி அல்லது பாதாம் - 10
நெய் - 1 தேக்கரண்டி
பால் - 1/2 கோப்பை

செய்முறை

1. முதலில் ஓட்ஸை லேசாக வறுத்து கொள்ளவும்.

2. வறுத்த ஓட்ஸ் சூடு ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

3. பொடியாக்கிய ஓட்ஸை மீண்டும் வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

4. பொட்டுக்கடலையை வாணலில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

5. வறுத்த பொட்டுக்கடலையுடன், சர்க்கரை, வறுத்த ஓட்ஸ் மாவு, ஏலக்காய் சேர்த்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

6. முந்திரியை சிறிய அளவில் நறுக்கி, சிறிது நெய்யில் பொன் நிறமாக வறுத்து, மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

7. இந்த மாவுக் கலவையை அகண்ட பாத்திரத்தில் போட்டு, சுண்ட காய்ச்சிய பாலை சூடு குறையாமல் சிறுது சிறிதாக மாவில் ஊற்றி, மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

8. மாவு கையில் ஒட்டாத வண்ணம் தேவையான அளவு மட்டும் பாலை ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். 9. மாவிற்கு மேல் நெய் ஊற்றி பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிசைந்து கொள்ளவும்.

10. முந்திரி அல்லது பாதாமை துருவி, உருண்டையில் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.

குறிப்பு

1. பொட்டுக்கடலைக்குப் பதிலாக வறுத்த நிலக்கடலை சேர்த்தும் செய்யலாம்.

2. மாவில் பால் அதிகமாகி, மாவு பிசுபிசுப்பாகி விட்டால், பொட்டுக்கடலை மாவை மேலும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவும்.

3. பொட்டுக்கடலை சேர்க்காமலும் ஓட்ஸ் லட்டு செய்யலாம்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.