சமையல் குறிப்புகள்
ஓட்ஸ் வகைகள்

ஓட்ஸ் புட்டு

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - ஒரு கோப்பை
பச்சரிசி மாவு - அரை கோப்பை
சர்க்கரை - ஒரு கோப்பை
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
முந்திரி - 5
தேங்காய்த்துறுவல் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1 மேஜைக்கரண்டி

செய்முறை

1. ஓட்ஸை கடாயில் இளம் சூட்டில் வறுத்து, பின்னர் மிக்ஸியில் இட்டு கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

2. அரிசி மாவை தனியே கடாயில் இட்டு இளம் சூட்டில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

3. கால் கோப்பை தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.

4. ஓட்ஸ் மாவையும், அரிசி மாவையும் ஒன்றாகச் சேர்த்து, இதில் உப்பு கலந்த தண்ணீர் தெளித்து கட்டியில்லாமல் பிசிறி கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

5. ஊறிய மாவை ஆவியில் வேகவைக்கவும்.

6. பின்னர் இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த் தூள், தேங்காய்த்துறுவல் சேர்த்து நன்றாக கலக்கவும்.

7. முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கி, தனியே நெய்யில் வறுத்து, புட்டு மாவுடன் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு

1. மாவில் தண்ணீர் தெளிக்கும் போது சரியான அளவில் சேர்க்கவும். அதிகம் சேர்த்தால் மாவு கட்டி பிடித்துக் கொள்ளும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.