சமையல் குறிப்புகள்
பச்சடி வகைகள்

புடலங்காய் பச்சடி

தேவையான பொருட்கள்

புடலங்காய் - ஒரு பாதி
தயிர் - 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. இளசான புடலங்காய் மிகப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. சின்ன வெங்காயத்தைப் பொடியாகவும், பச்சை மிளகாயை நீள் வாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

4. இதனுடன் நறுக்கிய புடலங்காய், உப்பு சேர்த்து லேசாக வதக்கி இறக்கவும்.

5. புடலங்காய் ஆறியதும், தயிர், நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேங்காய்ப்பூ சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு

1. புடலங்காயுடன் உப்பு சேர்த்து பிசறி சிறிது நேரம் வைத்து, பின்னர் தண்ணீர் நீக்கி, தாளித்த பொருட்களுடன் வதக்கமல் பச்சையாகவும் சேர்க்கலாம்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.