சமையல் குறிப்புகள்
பக்கோடா வகைகள்

சுரைக்காய், வெந்தயகீரை பகோடா

bottlegourd pakkoda

தேவையான பொருட்கள்

துருவிய சுரைக்காய் - அரை கோப்பை
வெந்தயகீரை - அரை கோப்பை
கடலை மாவு - அரை கோப்பை
அரிசி மாவு - இரண்டு மேசைக் கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1
துருவிய இஞ்சி - ஒரு மேசை கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 2 பெரியது
எண்ணை - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வாணலியில் எண்ணையை சுட வைக்கவும்.

2. வெந்தயகீரையை மண் போக கழுவி ஆய்ந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

3. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சுரைக்காய்,வெந்தயக் கீரை, மிளகாய்த் தூள், உப்பு, துருவிய இஞ்சி, வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, எண்ணை சேர்த்து நன்கு பிசையவும்.

4. இதனுடன் கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து, அடுப்பில் வாணலியில் சுட வைத்த எண்ணெயில் இட்டு பகோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

குறிப்பு

1. மாலை வேலை இஞ்சி டீயுடன் குடிக்க பிரமாதமாக இருக்கும்.

2. ஆயத்த நேரம் - 15 நிமிடம், சமைக்கும் நேரம் - 15 நிமிடம், பரிமாறும் அளவு - 3 நபர்களுக்கு.

ஆக்கம்

ஜலீலா கமால்
துபாய்.