சமையல் குறிப்புகள்
பாயச வகைகள்

கேரட் கீர்

carrot geer

தேவையான பொருட்கள்

கேரட் - 1/2 கிலோ
தேங்காய் - 1/2 மூடி (அல்லது) துருவல் 1 கோப்பை
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
நாட்டு சர்க்கரை - 150 கிராம்
முந்திரி - 5

செய்முறை

1. கேரட் மற்றும் தேங்காயை தனித்தனியே துருவி வைத்துக் கொள்ளவும்.

2. துருவிய கேரட் மற்றும் தேங்காயை தனித்தனியே (மிக்ஸியில்) அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

3. ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு சாற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து அதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.

4. முந்திரியை மெல்லிய சீவலாக சீவி அதனுடன் கலந்து கொள்ளவும்.

5. சுவையான இயற்கை உற்சாக பானம் தயார்.

குறிப்பு

1. இனிப்பு அதிகம் விரும்புவோர் தேவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

2. சாறு எடுத்தது போக மீதி இருக்கும் கேரட் பச்சை கேரட் அல்வா செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.