சமையல் குறிப்புகள்
பாயச வகைகள்

பால் கீர்

milk geer

தேவையான பொருட்கள்

பச்சரிசி அரிசி - 150 கிராம்
பால் - 1 லிட்டர்
முந்திரி - 10
பாதாம் - 10
வெள்ளரி விதை - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

1. அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

2. பாலில் ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

3. கொதிக்கும் பாலில் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு வேக விடவும்.

4. தனியே முந்திரி மற்றும் பாதாமை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

5. அரிசி வெந்ததும் சர்க்கரை, வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து, இரண்டு கொதி வரும் வரை நன்கு வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. பாதாமை சுடுதண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்தால் தோல் எளிதாக வந்து விடும். அதன் பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி முந்திரியுடன் சேர்த்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

2. விருப்பப்பட்டால் தேவையான அளவு மில்க் மெய்டு சேர்த்து செய்தால் மேலும் சுவையாக இருக்கும்.

ஆக்கம்

கோ. சுந்தரேஸ்வரி
சென்னை - 600 101.