சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
பாயச வகைகள் |
பால் பாயசம் தேவையான பொருட்கள் அரிசி - 200 கிராம் பால் - 1 லிட்டர் சர்க்கரை - 250 கிராம் பாதாம், முந்திரி - 15 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) திராட்சை - 15 நெய் - 50 கிராம் செய்முறை 1. பெரிய பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும். கொதித்த பின் பாதி பாலை தனியே எடுத்து வைத்து விடவும். 2. மீதியுள்ள பாதி கொதித்த பாலில் கழுவிய அரிசியைச் சேர்த்து (ஊற விட வேண்டாம்) 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இடையிடையே கிளறி விடவும். 3. பிறகு தனியே எடுத்து வைத்த பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராக கலந்து விடவும். 4. அரிசி குழைய வெந்தவுடன் லேசாக மசித்து சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலந்து விடவும். 5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். 6. பொடி செய்த ஏலக்காயை சிறிது தூவி இறக்கி வைக்கவும். குறிப்பு 1. விரைவாக செய்ய அரிசியைக் கழுவி துணியில் பரப்பி ஈரம் காயும் வரை காய விடவும். பின்னர் மிக்சியில் போட்டு ரவை போல பொடி செய்யவும். பொடி செய்த அரிசியை பாலில் வேக விடவும். பின்னர் நறுக்கிய பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றை வறுக்காமல் சேர்க்கவும். 2. தேவையானால் மில்க் மெய்டும் சேர்த்து செய்யலாம். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |