சமையல் குறிப்புகள்
கார வகைகள்

போண்டா

bonda

தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1/4 கிலோ
அரிசி மாவு - 1/2 கோப்பை
வெங்காயம் - 1 கோப்பை
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1/2 கோப்பை
பீன்ஸ் - 1/2 கோப்பை
முட்டைக்கோஸ் - 1/2 கோப்பை
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு -தேவையான அளவு

செய்முறை

1. கடலை மாவையும், அரிசி மாவையும் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

2. இதில் நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, பெருங்காயம், கேசரி பவுடர், சீரகம், உப்பு, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

3. வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை உருளையாக எடுத்து போடவும்.

4. போண்டா பொன்னிறமாக வெந்ததும் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் சூடாக பரிமாறவும்.

குறிப்பு

1. மாவைக் கலந்தவுடன் போண்டா இட வேண்டும். அப்போதுதான் போண்டா எண்ணெய் குடிக்காது.

2. எண்ணெய் சரியாக சூடாகாமல் போண்டா போட்டாலும் எண்ணெய் குடிக்கும்.

3. போண்டாவுக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியோ, மிளகாய் சட்னியோ, வெங்காய சட்னியோ செய்தால் சுவையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.