சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

பொட்டுக்கடலை உருண்டை

pottukkadalai urundai

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை (உடைத்தது) - 200 கிராம்
சர்க்கரை அல்லது வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

1. பொட்டுக்கடலையை நெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் 100 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

3. இதில் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

4. சர்க்கரை அல்லது வெல்லம் கரைந்து பாகு பதம் (கம்பி பதமாக) வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.

5. பிறகு வறுத்து வைத்துள்ள பொட்டுக்கடலையைச் சேர்த்துக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.

6. கைப்பொறுக்கும் அளவு சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலையை தேவையான அளவு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு

1. கம்பி பதம் என்பது சர்க்கரை கரைந்து நன்றாக கொதித்து பாகு ஆனதும் இதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து பச்சை தண்ணீரில் போடவேண்டும். பிறகு இதை கையில் எடுத்து இரு விரலில் அழுத்தி எடுத்தால் கம்பி மாதிரி நீண்டு வரும். இது தான் கம்பி பதம்.

2. பாகில் போடப்பட்ட பொட்டுக்கடலை சூடு ஆறி விட்டால் உருண்டை பிடிக்க முடியாத அளவிற்கு இறுகி விடும்.

ஆக்கம்

கோ. ராஜம்மாள்
சேலம் - 636 003.