சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

ராகி அவல் புட்டு

ragi aval puttu

தேவையான பொருட்கள்

ராகி அவல் - 2 கோப்பை
சர்க்கரை - 2 கோப்பை
முந்திரி - 5
துருவிய தேங்காய் -1/4 கோப்பை
ஏலக்காய் - 4

செய்முறை

1. ராகி அவலை சுடு தண்ணீரில்(கைப்பொறுக்கும் அளவு) கொட்டி இரண்டு நிமிடம் கழித்து நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு அவலை ஆவியில் வேகவைக்கவும்.

3. சர்க்கரை, ஏலக்காயை தனியே பொடி செய்து கொள்ளவும்.

4. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ராகி அவலைக் கொட்டி அதனுடன் பொடி செய்த சர்க்கரை, ஏலக்காய், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

5. அதன் மீது முந்திரியை சிறிது சிறிதாக உடைத்து சேர்க்கவும்.

குறிப்பு

1. இனிப்பு சுவைக்கேற்ப சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.