சமையல் குறிப்புகள்
சிற்றுண்டி வகைகள்

சப்பாத்தி

வீடியோ


chappathi

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1/4 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 1/4 கோப்பை தண்ணீரில் 1 தேக்கரண்டி எண்ணெய், உப்பு, சேர்த்து அதில் கோதுமை மாவை கொட்டி கையில் ஓட்டாத பதத்தில் மாவாக பிசைந்து வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.

2. மாவு பிசைந்து 1 மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தி கல்லில் இட்டு சிறிது எண்ணெய் அல்லது சிறிது கோதுமை மாவில் பிரட்டி அழுத்தி தேய்த்து, நான்காக மடித்து மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும்.

3. பிறகு தோசைக்கல்லில் போட்டு சிறிது எண்ணெயை சுற்றிலும் விட்டு திருப்பிப் போட்டு சப்பாத்தி நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு

1. கோதுமை மாவு பிசைந்ததும் உடன் கொஞ்சம் அடித்து வைத்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

2. மாவை இரவில் பிசைந்து குளிர்சாதனப் பெட்டியில் (ஃபிரிட்ஜ்) வைத்து காலையில் சப்பாத்தியாக தேய்த்தாலும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

3. சப்பாத்தி தேய்த்து கல்லில் போட்டதும் எண்ணெய் ஊற்றாமல் இரண்டு பக்கமும் உடனுக்குடன் திருப்பிப் போட்டு பிறகு எண்ணெய் ஊற்றினால் சப்பாத்தி உப்பிக் கொண்டு வரும்.

4. சப்பாத்தி சுடும் போது அடுப்பின் தணலை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.