சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
சிற்றுண்டி வகைகள் |
இடியாப்ப கிச்சடி தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/4 கிலோ தேங்காய் துருவல் - 1/4 கோப்பை பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 காய்ந்த மிளகாய் - 2 பூண்டு - 6 பல் இஞ்சி - 1/4 துண்டு மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கருவேப்பிலை - 2 கொத்து கொத்தமல்லித்தழை - சிறிதளவு கடுகு - 1/4 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி ஊளுந்து - 1/4 தேக்கரண்டி எண்ணெய் -2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். 2. பிறகு ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு அதனை மைய அரைத்தெடுக்கவும். 4. இட்லியை சூடு ஆறுவதற்குள் இட்டியாப்ப குழலில் இட்டு பிழிந்து எடுத்து வைக்கவும். 5. பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக அரிந்து கொள்ளவும். 6. இஞ்சியையும், பூண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 7. வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, ஊளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். 8. வெங்காயத்தைப் போட்டு வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 9. பின்னர் மசாலாத்தூள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 10. பிறகு இதில் ஆறிய இடியாப்பத்தை போட்டு நன்றாக கிளறவும். 11. பிறகு நறுக்கிய கொத்தமல்லித் தலையைப் போட்டு இறக்கவும். குறிப்பு 1. கடைகளில் விற்கப்படும் ஆயத்த நிலையில் இருக்கும் இடியாப்பத்திலும் கிச்சடி செய்யலாம். 2. இடியாப்ப இட்லி சூடு ஆறிவிட்டால் பிழிவதற்கு கடினமாக இருக்கும், ஆகவே உடனே பிழியவும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |