சமையல் குறிப்புகள்
சிற்றுண்டி வகைகள்

இட்லி உப்புமா

idly uppuma

தேவையான பொருட்கள்

இட்லி (சுமாரான அளவு) - 10

தாளிக்க தேவையானவை
பெரிய வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - இரண்டு மேசைக் கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - முன்று தேக்கரண்டி
கறிவேப்பிலை - உருவி இரண்டாக கிள்ளியது கால் கை பிடி
பெருங்காயப் பொடி - இரண்டு சிட்டிகை
உப்பு - ஒரு தேக்கரண்டி (தேவைக்கு)
ச‌ர்க்க‌ரை - இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
நெய் - உருக்கியது ஒரு தேக்கரண்டி

கடைசியில் மேலே தூவி கிளறி விட‌
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்துமல்லித் தழை - சிறிது
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி

செய்முறை

1. இட்லியை குளிர்ப்பதனப் பெட்டியில் (பிரிட்ஜில்) வைத்தால் கொஞ்சம் கல்லு மாதிரி கெட்டியாக இருக்கும். அதை வெங்காயம் செதுக்குவதில் நீளவாக்கில் செதுக்கி கொள்ளவும். (அல்லது குளிர வைக்காமல் அப்படியே கையாலும் உதிர்த்து கொள்ளலாம்). பிறகு சூடு படித்தி கொள்ளவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து (சர்க்கரை, நெய் தவிர) அதனுடன் செதுக்கிய இட்லியை போட்டு நன்கு கிளறவும்.

3. க‌டைசியாக‌ நெய், ச‌ர்க்க‌ரை சேர்த்துக் கிள‌றி, இஞ்சி, ப‌ச்சை மிள‌காய், கொத்தும‌ல்லித் த‌ழை தூவி ந‌ன்கு கிள‌றி விட்டு தேவைப‌ட்டால் அரை எலுமிச்சம் பழ‌ம் பிழிந்து அடுப்பிலிருந்து இறக்க‌வும்.

குறிப்பு

1. நெய் மணத்துடன் வாசனையாகவும், கார‌சார‌மாகவும், லேசான இனிப்பு சுவையுடனும் இது இருக்கும். எலுமிச்சம்பழம் சேர்த்தால் கார‌த்துடன் புளிப்பு சுவையும் சேர்ந்து இருக்கும்.

2. குழ‌ந்தைக‌ளுக்கு கொடுப்ப‌தாய் இருந்தால் ப‌ச்சை மிளகாய் சேர்க்க‌த் தேவையில்லை.

ஆக்கம்

ஜலீலா பானு
துபாய்.