சமையல் குறிப்புகள்
சிற்றுண்டி வகைகள்

பூரி

poori

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கோப்பை (150 கிராம்)
மைதா மாவு - 1 கோப்பை (150 கிராம்)
ரவை - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 1/2 கோப்பை தண்ணீரில் 1 தேக்கரண்டி எண்ணெய், உப்பு சேர்த்து அதில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை சேர்த்து கையில் ஓட்டாத பதத்தில் மாவாகப் பிசைந்து சிறு சிறு உருண்டையாக (பிளவு இல்லாமல்) உருட்டி வைக்கவும்.

2. சிறு உருண்டைகளை சப்பாத்தி கல்லில் இட்டு சிறிது எண்ணெய் ஊற்றி பூரி அளவிற்கு மெல்லியதாக அழுத்தி வைக்கவும்.

3. வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அழுத்தி வைத்துள்ள பூரி மாவை ஒன்று ஒன்றாக போட்டு சிவந்து உப்பி பொன் நிறமானதும் எடுத்து, வடிதட்டில் வைத்து எண்ணெய் இறங்கியதும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு

1. பூரி மாவு பிசைந்து அதிக நேரம் வைத்திருந்து பொரித்தால் அதிக எண்ணெய் உறிஞ்சும். அதனால் மாவு பிசைந்த சிறிது நேரத்தில் பூரி பொரித்து விட வேண்டும்.

2. மாவு பிசையும் போது ரவைக்குப் பதிலாக 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தாலும் பூரி மொருமொருப்பாக வரும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.