சமையல் குறிப்புகள்
வறுவல் வகைகள்

சேப்பங்கிழங்கு வறுவல்

seppangkizhangu varuval

தேவையான பொருட்கள்

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ
சோளமாவு - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. சேப்பங்கிழங்கை குழைந்துவிடாமல் வேகவைத்து, ஆறிய பிறகு தோல் நீக்கி ஒரே அளவாக நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய கிழங்கில் சோளமாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்தூள், கேசரி பவுடர், உப்பு சேர்த்து பிசறவும்.

3. பின்னர் எண்ணெயைக் காயவைத்து, பிசறி வைத்த சேப்பங்கிழங்கை எண்ணெயில் போட்டு பொன் நிறமாக வறுத்தெடுக்கவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.